தமிழ்,தெலுங்கு மட்டுமின்றி இந்தியாவையே திரும்பிபார்க்கவைத்த படம் பாகுபலி 2. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,சத்யராஜ் மற்றும் தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்துள்ள இந்த படம் பல வசூல் சதனைகளை படைத்து வருகிறது.திரையுலக பிரபலங்கள் பலரும் முதல் நாளிலேயே படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.

பாகுபலி காய்ச்சல் ரஜினியையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம். ஆம் பாகுபலி 2 படத்தை பார்த்த ரஜினி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியபோது,

பாகுபலி-2′ இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.