Rajinikanth double role in darbar movie – முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படமான தர்பார் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.

பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. இப்படம் ரஜினிக்கு 166வது படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் சேதுபதிக்கு சோறு ஊட்டி விடும் சிம்பு: வைரலாகும் புகைப்படம்

இப்படத்திற்கு தர்பார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் , இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினி இரட்டை வேடங்களில் நடிப்பதால், ரசிகர்களுக்கு தர்பார் படம் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.