பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தனது கடைசி படம் அமைய வேண்டும் என ரஜினி விரும்புவதாக செய்தி கசிந்துள்ளது.

ரஜினி, கமல் இருவருமே அரசியல் இறங்குவதாக அறிவித்துவிட்டனர். இதில், கமல் கட்சியை தொடங்கியதோடு, களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்தியன் 2 தனது கடைசி படம் எனவும் அவர் அறிவித்துவிட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  அழிவு வரும் நேரத்தில் அப்படித்தான் பேசுவார்கள்: ரஜினிகாந்த்

ஆனால், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவும் இல்லை.. தனது கடைசி படம் எது எனவும் கூறவில்லை. அடுத்த சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ள ரஜினிக்கு அதுவரைதான் சினிமாவில் நடிக்க நேரமிருக்குறது. பேட்ட படத்திற்கு பின் முருகதாஸ் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். அதன்பின், தனக்கு பாஷா எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் படத்திலும் நடிக்க ரஜினி ஆசை படுவதாக தெரிகிறது. எனவே, அதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நக்மா

இந்நிலையில், பாகுபலி பார்த்த பின் ராஜமவுலியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரஜினிக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அநேகமாக, அந்த படத்தையே ரஜினி தனது கடைசி படமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது.