கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. இதில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.

நடிகை திரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அசத்தலாக இருந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினி மற்றும் விஜய் சேதுபதியின் ‘பேட்ட’ லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

இப்படத்தில் ரஜினி மிசா கைதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. 1971 ஆம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் தான் இந்த மிசா சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.