பேட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய்சேதுபதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய்சேதுபதி, நவாஸுதின் சித்திக், ஆடுகளம் நரேன், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் பேட்ட படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி விஜய்சேதுபதிக்கு அட்வைஸ் செய்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி விஜய்சேதுபதியிடம் மார்க்கெட் இருக்கும்போதே நிறைய படத்தில் நடித்துவிடுங்கள். படம் தயாரிப்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். படம் தயாரிப்பது கடினமான விஷயம். அதனை கவனமாக கையாள வேண்டும். ஆகவே நடிப்பதில் முழு கவனம் செலுத்துங்கள் என ரஜினி அட்வைஸ் செய்துள்ளார்.