சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ரஜினிகாந்த் பேசினார்

ரஜினிகாந்த் பேசியபோது, ‘நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளேன்’ என்று கூறினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே ரஜினி, ‘நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை, எனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகத்தான் சொன்னேன்’ என்று கூறியதால் ரசிகர்கள் அமைதியாகினர்

மேலும் எனக்கு அரசியல் எவ்வளவு ஆழம் என்பது தெரியும். அது தெரிந்ததால் தான் அமைதியாக உள்ளேன். ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன் என்று கூறினார்