Rajinikanth appreiciate Nerkonda paarvai  – வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 8ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த 5 நாட்களிலும் தமிழகம் முழுவதும் ரூ.29 கோடியை வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ. 6.70 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் 2 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை இப்படம் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அஜித்தை தொலைப்பேசியில் அழைத்து மிகவும் பாராட்டினாராம். அதேபோல், படத்தின் இயக்குனர் வினோத்துக்கும் தனது வாழ்த்தை தெரிவித்தாராம்.

நேர்கொண்ட பார்வை டிரெய்லரை பார்த்த போதே வினோத்தை ரஜினி பாராட்டியதாக செய்தி வெளியானது. அதேபோல், தர்பார் திரைப்படத்திற்கு பின் ரஜினியை வைத்து வினோத் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.