ரஜினியின் முகத்தில் சாயம் பூசிய சௌந்தர்யா

ஹோலி பண்டிகையானது நாட்டின் எல்லா பகுதிகளிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது மனைவி மகள்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வடஇந்தியாவில் தான் இந்த ஹோலி பண்டிகையானது முக்கியமான விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுவது வழக்கம். வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து வண்ணமயமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் அனைவரும் மற்றவா்கள் மீது வண்ணப்பொடியை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடி வருவார்கள். இந்த விழாவானது பங்குனி மாதம் பெளா்ணமியன்று மார்ச் மாதம் கொண்டாடப்படும்.  கிருஷ்ண பகவான் கோபியா்களுடன் விளையாடி மகிழ்ந்தது இந்த ஹோலி பண்டிகை. கிருஷ்ணரும் ராதாவும் விளையாடி விளையாட்டு தான் இந்த பண்டிகை.

தென்னிந்திய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாரஜினிகாந்த் மற்றும் தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோருடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ரஜினி குடும்பத்தாருடன் கொண்டாடி இந்த புகைப்படத்தினை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹோலி பண்டிகையின் வண்ணமயமான இந்த தருணத்தில் தான் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்த காலா படத்தின் டீசர் வெளியாகி ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவரது ரசிகா்களை ஆச்சரியத்தில் உள்ளாகும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தினை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.