சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அரசியல் உள்பட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது 2ஆம் கட்ட சந்திப்புகான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 26 முதல் 31 வரை கோடம்பாக்கம் ராகவேந்திரா மஹாலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் காலை 8 மணி முதல் மதியம் 3 வரை இந்த ஆறு நாட்களில் ரஜினிகாந்த் தினமும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வரும் ஜனவரியில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் அதை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.