நேற்று இரவு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிகாந்தின் தொடர்ந்து அரசியல் பிரபலங்களை சந்தித்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அங்கு திருமாவளவனும் இருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. அதேபோ, நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் பேசினார். தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கான பத்திரிக்கையையும் ஸ்டாலினிடம் ரஜினி வழங்கினார்.

இந்நிலையில், நேற்று இரவு 10.15 மணியளவில் தன்னுடைய சக நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர் கமீலா நாசரும் உடன் இருந்தார்.

தன்னுடைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கவே ரஜினி வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் சந்திப்பு 45 நிமிடங்கள் நீண்டதால் அரசியல் குறித்தும் இருவரும் விவாதித்திருக்கலாம் என கருதப்படுகிறது..