கோடிக்கணக்கான ரசிகா்களை வைத்துள்ள ரஜினி தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். தனது அரசியல் பணிகளுக்கிடையில் தற்போது காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தனது ரசிகா்கள் முன்னிலையில் அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தார்.

ட்விட்டர் வலைத்தளத்தில் மட்டும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து ரஜினி உள்ளார் என்பது நமக்கு தெரியும். அவா் ட்விட்டர் வலைத்தளத்தில் பெரியதாக எதுவும் பதிவுகள் பதிவிட இல்லை என்றாலும் எப்போதாவது போடும் பதிவுகளுக்கு லைக்ஸ்யும் ஷோ்களும் அதிகமாக இருக்கும். அவரது ட்விட்டரை ஃபாலோயார்களாக சுமார் 5 மில்லியன் பேர்கள் இருக்கின்றனா்.ட்விட்டா் வலைத்தளத்தில் திரைப்படம் மற்றும் நண்பா்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் பதிவு செய்து வந்த அவா் தற்போது அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்.

தற்போது ரஜினிகாந்த் புதியதாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இணைந்துள்ளார். கபாலி படத்தின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வணக்கம் வந்துட்டேன்னு சொல்லு என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல பே ஸ்புக்கில் வணக்கம் என்ற ஒரு பதிவு மட்டும பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரு வலைத்தள பக்கத்திலும் ஆயிரக்கணக்கானனோர் ஃபாலோயா்களாக குவிந்து வருகின்றனா்.