துபாயில் நேற்றிரவு மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல விவிஐபிக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளை மும்பையில் நடைபெறும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக இன்று மும்பைக்கு சென்றுள்ளார்.

மும்பை – ஜூஹு பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னர் நாளை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.