ஆன்மிக பயணமாக இமயமலை சென்ற ரஜினி தற்போது சென்னை திரும்பியுள்ளார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி ஆன்மிக பயணம் சென்றது பற்றியும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் பற்றி கருத்து தெரிவித்தார்.

அரசியலில் களம் இறங்கிய ரஜினி தொண்டா்களை மாவட்டம் வாரியாக சந்தித்தார். இதற்கிடையில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் தான் ஆன்மிக பயணமாக இமயமலை சென்ற, அந்த பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பினார். பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்த பயணம் மனதுக்கு புத்துணா்ச்சி அளித்துள்ளது. புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

செய்தியாளர்கள் ராமர் ரத யாத்திரை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ரதயாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மதக்கலவரத்தை அரசு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் ஆண்டவனும், மக்களும் தான் இருக்கின்றனா் என்று கூறினார்.அதுபோல அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு பதிலளிக்க மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இதை எத்தனை முறை சொல்ல வேண்டும் என தெரியவில்லை.