நள்ளிரவில் சென்னை திரும்பிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினார். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த், நேற்று துபாய் வழியாக சென்னை வந்தடைந்தார். அவருடன் அவருடைய மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் வந்தார்.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்னும் ஒரிரு நாட்களில் ‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ள ரஜினிகாந்த், இந்த சந்திப்பின்போது அரசியலில் குதிப்பது எப்போது என்பது உள்பட பல முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.