சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன்னர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். உடல்நல பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் சென்னை திரும்புவார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று மாலை சென்னை வந்த ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை போயஸ்கார்டன் வீட்டிற்கு வந்த ரஜினியை அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நாளை முதல் மீண்டும் மக்கள் மன்ற பணிகளை கவனிக்கும் ரஜினி வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.