ரஜினியுடன் செல்பி எடுத்த மலேசிய பிரதமர்

ரஜினியுடன் செல்பி எடுத்த மலேசிய பிரதமர்


மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் நடிகர் ரஜினிகாந்தை அவரதுன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 5 நாள் பயணமாக இந்தியா வந்தார். முன்னதாக தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 10:30 மணியளவில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக்கும் அவரது மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் மலேசிய பிரதமர் அழைப்பு விடுத்தனர். சுமார் 1 மணி நேரம் இவர்களது சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரஜினியுடன் மலேசிய பிரதமர் தந்து செல்போனில் செல்பி எடுத்தார்.