அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இவங்களை சேர்க்க மாட்டேன்: ரஜினிகாந்த்

11:42 காலை

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக விடை கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில் இன்று ரசிகர்களிடையே பேசிய ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்று வழக்கம்போல் கடவுளின் மீது பாரத்தை போட்டுள்ளார்

இன்று ரசிகர்களிடையே அவர் பேசியதாவது: சில வருடங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் விபத்து என்று கூறும் அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான் ஒரு கூட்டணியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து என்னை வாழ வைக்கும் தெய்வங்களான பொதுமக்கள் அந்த கூட்டணியை ஏற்று கொண்டு வெற்றி பெற வைத்தார்கள்.

இந்த நிகழ்வை அடுத்து ஒருசில எனது ரசிகர்கள் சில அரசியல்வாதிகளிடம் தொடர்பு வைத்து கொண்டு ஒவ்வொரு தேர்தலின்போது நான் அவர்களை ஆதரிப்பதாக கூறி ஆதாயம் பெற்றார்கள். அரசியல்வாதிகளும் அவர்களை பயன்படுத்தி கொண்டார்கள். இதன் காரணமாக ஒருசில தேர்தலின்போது நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று கருத்து சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் ஒரு பெரிய அரசியல் தலைவரோ, சமூக நல ஆர்வலரோ, பெரிய ஆளோ கிடையாது. என்னுடைய ஆதரவை தேடி பல அரசியல் கட்சிகள் எனக்காக காத்திருந்ததார்களா? என்றால் அதுவும் கிடையாது. என் பெயரை சொல்லி யாரும் வாக்கு கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் அந்த அறிவிப்பை நான் ஒவ்வொரு தேர்தலின்போது வெளியிடுகிறேன்.

அந்த ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கை உள்ளது. அந்த ஆண்டவனின் கருவி தான் நான். தற்போது கடவுள் என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். இன்று நடிகனாக உள்ளேன். நாளை என்ன பொறுப்போ அதை ஏற்றுக்கொள்வேன். கடவுள் நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும் அந்த பொறுப்பில் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன். இப்பொழுது நடிகனாக எப்படி நியாயமாக இருக்கின்றேனோ அதேபோல் நாளை எந்த பொறுப்பிற்கு வந்தாலும் நியாயமாக இருப்பேன்.

மேலும் தன்னை ஊடகங்கள் முடிவெடுக்க தெரியாதவன் என்று விமர்சனம் செய்கின்றன. ரஜினிகாந்த் எதுக்கும் தயங்குவாரு, பயப்படறாருன்னு எழுதுறாங்க. அவங்க எழுதட்டும். நான் ஏதாவது ஒரு விஷயம் சொல்லணும்னா, தீவிரமா யோசிப்பேன். முடிவெடுத்த பிறகுதான் சில விஷயங்கள் தெரிய வரும். ஒரு குளம் இருக்கு. தண்ணியில காலை வைக்கிறோம். பிறகுதான் அதுக்குள்ள முதலைகள் இருக்குன்னு தெரியுது. காலை எடுக்க மாட்டேன்னு இருந்தா எப்படி? பேசிறவங்க பேசிட்டுதான் இருப்பாங்க’ இவ்வாறு ரஜினி சொன்னதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

(Visited 23 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393