Rajinikanth 167 – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குடும்பத்துடன் ரஜினி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

பேட்ட படத்துக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் உள்ள புகழ் பெற்ற சேவியர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் போது அதை சில மாணவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். படப்பிடிப்பு துவங்கியதிலிலிருந்து இதுவரை 10க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வெளியாகி விட்டன.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதஸின் குடும்பத்தினர் ரஜினிகாந்த்துடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.