அழிவு வரும் நேரத்தில் அப்படித்தான் பேசுவார்கள்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்வதற்காக அவரை கடுமையாக ஒருசிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ரஜினி அரசியலுக்கு வரமாட்டான்’ என்று பாஜக மூத்த தலைவர் ஒருமையில் பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் மூத்த தலைவர் ஒருவர், நாடே மதிக்கும் சூப்பர் ஸ்டார் ஒருவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததை பலர் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், ‘’வினாச காலே விபரீத புத்தி’ என தெரிவித்துள்ளார். இதற்கு அழிவுகாலம் ஆரம்பித்து விட்டதால் புத்தி விபரீதமாக யோசிக்கும் கெட்டதையே பேசும் என அர்த்தம். ஆனால், ரஜினி தன்னை அவன் என விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமியை விமர்சித்தாரா அல்லது பா.ஜக.,வை விமர்சித்தாரா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ரஜினியை உசுப்பேற்றியே அவரை அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.