நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டதாகவும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்றும் கூறினார்.

ரஜினியின் இந்த கருத்தை தங்களுடைய இஷ்டப்படி திரித்து ஒருசில அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர் மேலும் ரஜினிகாந்த் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று கூறிவிட்டாதாகவும், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி தங்களுக்கு விளம்பரம் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், ‘போராட்டம் செய்தவர்களை அவமதித்த ரஜினியை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இன்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்