அதிக தொகைக்கு விலை போன 2.0 வினியோக உரிமை…

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் வினியோக உரிமை மிகவும் அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.400 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் ஹீரோ அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மற்ற பணிகள் முடிந்து, இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ளது.

அதே நேரத்தில் அப்படத்திற்கு வியாபாரா ரீதியான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் ரூ.81 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.110 கோடிக்கு விலை போனதாக செய்திகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.