ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில்
உருவாகி வரும் படம் ‘பேட்ட’. இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’
நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கும் ரஜினிகாந்த்-க்கு
வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன்,
த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா
ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரஜினியின் 165-வது படமான இப்படத்திற்கு அனிருத்
இசையமைக்கிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில், வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்
மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு லக்னோவில்
நடைபெற்று வருகிறது. தற்போது, இதன் அடுத்த கட்ட
படப்பிடிப்பை காசியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. அந்த படப்பிடிப்பில் ரஜினி, த்ரிஷா
சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.