காலா: ரஜினி-ரஞ்சித் பட டைட்டில் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள ‘தலைவர் 161’ படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நேற்று தனது டுவிட்டரில் அறிவித்தார். அதேபோல் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தலைவர் 161’ படத்திற்கு ‘காலா’ என்ற டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காலா’ என்பது கரிகாலன் என்ற மாமன்னனின் சுருக்கம் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் டைட்டிலுக்கு கீழே ‘கரிகாலன்’ என்ற வார்த்தையும் டைட்டில் போஸ்டரில் காணப்படுகிறது

ரஜினிகாந்த், ஹூமா குரோசி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘கபாலி’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் மாஸ் டைட்டிலுக்கு டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.