ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் புத்தம் புதிய போஸ்டர்கள் வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்திய சினிமாவில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படங்களில் ஒன்றான இப்படத்தின் டிரெய்லர் 3டியில் வருகின்ற நவ.3ஆம் தேதி வெளிவரும் என ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் பட போஸ்டர்களை அவ்வப்போது வெளியிடுவதால், அப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘2.0’ படத்தின் போஸ்டர் ஹாலிவுட்டில் வெளியான ’அவெஞ்சர்ஸ்’ படத்தை நினைவூட்டுவதாக சில விமர்சனங்கள் வந்தன.

இருப்பினும், வரும் நவம்பர் 3ம் தேதி வெளிவரும்’2.0′ படத்தின் டீசரையும், 29ம் தேதி வெளிவரும் 2.0 படத்தையும் ரசிகர்கள் அதிக மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், சமுகவலைதளங்களில் வெளியாகும் 2.0 படத்தின் புது புது போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.