ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் சென்னையில் பிரம்மண்டமாக வெளியிடப்பட்டது. இதில், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஷங்கர், ரஹ்மான், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘2.0’ படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் யூடியூப், சமுக வலைதளம், இன்ஸ்டராகிராம் ஆகியவற்றின் மூலம் வெளியான நாள்முதல் தற்போது வரை 140 மில்லியன் (14 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது.