ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படமும், அஜித் நடிப்பில்
‘விஸ்வாசம்’ படமும் வருகின்ற பொங்கலுக்கு
வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினி
நடிக்கும் படம்’பேட்ட’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது
உத்திரப்பிரேதச மாநிலத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்புகள் விரைவாக முடிவடைந்துவிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் இவரா! சூப்பர்

இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை பொறுத்து
படத்தின் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு அல்லது மற்றொரு
தேதியில் முடிவு செய்யப்படலாம் என்ற தகவலும்
வெளியாகியுள்ளது.

இதனிடையே இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி
நடித்துள்ள 2.0 படமும் வரும் நவம்பர் 29-ஆம் தேதி
வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைத்
தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்தில் ரஜினியின் அடுத்த
படத்தை நாம் பார்க்கலாம்.

இதையும் படிங்க பாஸ்-  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையில் ஏழு பேர் விடுதலை: வலுக்கும் கோரிக்கை!

இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்
நடிப்பில் வெளிவரும் ‘விஸ்வாசம்’ படமும் பொங்கல்
அன்று திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ‘பேட்ட’ படமும், ‘விஸ்வாசம்’ படமும்
பொங்கலுக்கு வெளியாகும் பட்சத்தில் ரசிகர்கள் மிகுந்த
கொண்டாட்டத்தில் ஈடுபடுவர் என்பது தெளிவாக
தெரிகிறது.