ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பா.ரஞ்சித் இயகக்த்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படம் வெற்றி பெற்றது.
இப்படத்திற்கு ரஞ்சித் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் அடுத்து மீண்டும் ரஞ்சித்தின் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த படம் ரஜினிகாந்திற்கு 161வது படமாகும்.