விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சன் ஏற்கனவே தமிழகத்தில் பிரபலம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருக்கு தற்போது தமிழ்த்திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

ஓகே கண்மணி’ புகழ் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்ற படத்தை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மானின் நண்பராக நடிக்க ரக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை துல்கர் சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் இன்னொரு தொகுப்பாளர் ஜாக்குலின், நயன்தாராவின் தங்கையாக ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.