சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு விஞ்ஞான அறிவியல் கதையில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் என்பதும், தற்போது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் NGK படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், டி.முத்துராஜ் கலை இயக்கமும் செய்யவுள்ளனர்.