ரகுல் ப்ரீத் சிங், கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் ரகுல் ஸ்பைடா் படத்தை ரொம்பவும் நம்பியிருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. படம் வந்த வேகத்திலேயே திரும்பி போய் விட்டது. இந்த படத்தினால் தமிழ்,தெலுங்கில் தனது சினிமா படவாய்ப்புகள் தன்னை தேடும் வரும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால் அவருடைய அந்த எண்ணம் பலிக்கவில்லை.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூா்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். ஆனால் இந்த படத்தில் இரண்டாவது நாயகி தான் ரகுல் என்று பேச்சு அடிப்படுகிறது. இதைபற்றி ரகுல் கோபமாக பேசியுள்ளார்.

அவா் கூறிய என்னவெனில், நான் நடித்து வரும் எல்லாம் படங்களிலும் முதன்மை ஹீரோயினாக தான் நடித்து வருகிறேன். என்னுடன் நடிக்கும் படங்களில் இரண்டு மூன்று நாயகிகள் நடித்தாலும், அதை எல்லாம் காரணம் சொல்லி எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கொஞ்சம் கூட குறைக்கவில்லை இயக்குநா்கள். என்னை டம்மியாக்கி மற்ற நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அப்படி நான் இரண்டாவது நாயகி என்று தெரிந்தால் அந்த படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என்று சற்று கடுமையாக கூறியுள்ளார்.