தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தவர் ரகுல்ப்ரீத் சிங். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கார்த்தியுட்ன் மீண்டும் ஒரு படம் என்று பிஸியாக உள்ளார். இவர் சமீபத்தில் மேக்ஸில் புத்தகத்தின் அட்டைபடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து ரகுல் கூறியபோது,

மேக்ஸிம் புத்தக அட்டை படத்தில் புகைப்படம் இடம் பெறுவது சாதாரண விசயம் கிடையாது. அது எளிதில் கிடைக்காது . தென்இந்தியாவில் தான் இதனை பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய வி‌ஷயமே இல்லை. ‘தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.