நடிகா், நடிகைகள் காதலிப்பதும், காதலில் சிக்குவதும், வழக்கமாக நடைபெறும் ஒன்று. பின்பு அந்த  காதலை மறுப்பதும், அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்வதும் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். ராணாவுடன் திரிஷாவுக்கு காதல் என்று செய்திகள் பரவின. அந்த காதல் தோல்வியை தழுவியது. இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது ராணாவும் ரகுல் ப்ரீத்திசிங் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

ஏற்கனவே பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசுகள் செய்திகளாக வந்தது. இதை நடிகை அனுஷ்கா நேரடியாகவே மறுப்பு தெரிவித்தார். எல்லாரையும் இவா்களும் நாங்கள் நண்பா்களாக தான் பழகி வருகிறோம் என்று தெரிவித்தார். நான் திருமணம் பற்றி தற்போது வரை நினைக்கவில்லை என்று கூறினார்.

தீரன் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்திங்கவுடன் பாகுபலி வில்லன் நடிகா் ராணவுக்கும் காதல் மலா்ந்து இருப்பதாக செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியாக பரவி வரும் கிசுகிசு பற்றி ரகுல் ப்ரீத்திங் கூறியதாவது, எங்கள் நண்பா் குழுவில் 20 போ் இருக்கிறோம். அதில் நானும், ராணாவும் நெருங்கிய நண்பா்கள். அதில் சிலா் தான் திருமணம் ஆகாதவா்கள். அதனால் திருமணம் ஆகாத நாங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொள்வதை பார்ப்பவா்கள் தான் இப்படி கிசுகிசுக்களை பரப்பி வருகிறார்கள். இதை பார்த்து நானும் ராணாவும் சிரித்துக்கொள்வோம் என்றார்.

ரகுல் ப்ரீத்திங் சிங் தற்போது சூா்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மீண்டும் கார்த்தியுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இவா் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.