தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார். அவா் மிகவும் எதிர்பார்த்த ஸ்பைடர் படமானது அந்தளவுக்கு போகவில்லை. இந்நிலையில் ரகுல் பரபரப்பான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி தான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழில் ஸ்பைடர் எதிர்பார்த்த வகையில் அமையாத போதும் கார்த்தி உடன் ரகுல் நடித்த தீரன் படமானது வெற்றி பெற்றது. இவா் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சூா்யாவுடன் ஒரு படமும், மீண்டும் கார்த்தியுடன் ஒரு படமும் என தமிழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ரகுல் பேசியதாவது, நான் மும்பையிலிருந்து வந்தாலும் முதலில் நான் பேசுவது தெலுங்கு தான். இது என் ஹைதராபாத் நண்பா்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அது எனக்கும் ஆச்சரியமாக தான் உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவா்கள் பேசும்மொழியை உடனே கற்று விடுவேன். கடின உழைப்பாளியான நான் தெலுங்கு திரையுலகில் அதிகமாக பணியாற்றியதால் அந்த மொழியை கற்க தொடங்கிவிட்டேன்.

மக்கள் நாட்டில் நடக்கும் மிகவும் துயரமான பாலியல் பலாத்காரங்கள் போன்ற சம்பவங்களை உடனே மறந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் நடக்கும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயத்தை பற்றி அதிகமாக பேசுகிறார்கள். அதற்கு காரணம் சினிமாவில் தானே மசாலா அதிகம் இருக்கிறது. அதுபோல நான் இதுவரை இருபது படங்களில் நடித்து விட்டேன். ஆனால் என்னை யாரும் இதுவரை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே சினிமாத்துறையில் அதிகம் சாதிக்க முடியும். அது எப்படி என்று தெரியவில்லை. என்னை சுற்றி நல்லவர்களே உள்ளனர். நான் ரொம்ப அதிஷ்டசாலி என்று கூறுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.