ராகுல் ப்ரித்திசிங் எச்சரிக்கை: அதிர்ச்சியில் இயக்குனர்கள்

தன்னுடைய கேரக்டரை டம்மியாக்கும் இயக்குனர்களின் படங்களில் இருந்து விலகிவிடுவேன் என்று பிரபல நடிகை ராகுல் ப்ரித்திசிங் எச்சரிக்கை விடுத்துள்ளது அவரை வைத்து படம் இயக்கி வரும் இயக்குனர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி ஆன ராகுல் ப்ரித்திசிங், அந்த படம் பிளாப் ஆன போதிலும் சூர்யா-செல்வராகவன் படம், கார்த்தியின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மற்றும் இந்தி படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ராகுல் படங்களில் ஒன்றில் இன்னொரு பிரபல நாயகி ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இதனால் ராகுலின் கேரக்டர் டம்மியாக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்தே இந்த எச்சரிக்கையை ராகுல் விடுத்துள்ளார். ஆனால் அவர் இந்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு என குறிப்பிட்டு சொல்லவில்லை.