இயக்குனர் ராம்-யுவன் கூட்டணியில் வரும் படங்களில் எல்லாமே பாடல்கள் மிக அருமையாக இருக்கும். ராம் இயக்கிய கற்றது தமிழ்,தங்கமீன்கள் போன்ற படங்களே இவர்களின் கூட்டணி படங்களின் பாடல்கள் ஹிட்டுக்கு சாட்சி. யுவன் தனது நண்பர் செல்வராகவன் படங்களுக்கு தனது சிறப்பான இசையமைப்பை வெளிப்படுத்துவார். அதுபோலவே ராமின் படங்களுக்கு மியூசிக்கல் ஹிட் கொடுப்பார்.

கற்றது தமிழில் வந்த பறவையே எங்கு இருக்கிறாய், பட பட பட்டாம்பூச்சி, கற்றது தமிழில் வந்த ஆனந்த யாழை மீட்டுகிறாய் போன்ற பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம் இந்த படங்களின் பாடல்களை நா முத்துக்குமார் அவர்கள் எழுதி இருந்தார். ராமின் நெருங்கிய நண்பர் நா முத்துக்குமார் அவர்கள் .

நா.முத்துக்குமார் இல்லாத இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என புகழாரம் பாடிய ராம் இப்படத்தில் தனது மனைவியை பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வழக்கமான ராம்-யுவன் கூட்டணி போலவே இதுவும் நன்றாக இருப்பதாக பல இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.