17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. ஆனால் இந்த செய்தி தமிழக பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் முழு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. காரணம் தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள் வெற்றிப் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 1.

இதையும் படிங்க பாஸ்-  10 தொகுதிகளில் கலக்கிய மக்கள் நீதி மய்யம் ! – நாம் தமிழர், அமமுக வீழ்ச்சி !

இதில் முக்கியமாக தனது சொந்த தொகுதியான தர்மபுரியில் போட்டியிட்ட பாமகவின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி தோல்வியடைந்திருப்பதுதான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் திமுக வேட்பாளரிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இது பாமகவின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  தோல்வி பயத்தில் அதிமுக? - 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்... எடப்பாடி ஸ்மார்ட் மூவ்

இந்நிலையில் பாமகவின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்த வந்த ராமதாஸிடம் பாமகவின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டார்.