பிரபல தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தான் நடித்து வரும் ஜுங்கா படத்தில் சின்னத்தை பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராக்ஸ்டார் ரமணியம்மாளை பாடல் பாட வைத்து அசத்தியுள்ளார்.

சின்னத்திரை ஒன்றில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமான ராக்ஸ்டார் ரமணியம்மாளை இசையமைப்பாளர்கள் டி.இமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தங்கள் படத்தில் பாட வைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி இவர்களையெல்லாம் முந்திக்கொண்டு ரமணியம்மாளுக்கு தனது ஜுங்கா படத்தில் வாய்ப்பளித்து தான் கொடுத்த உறுதியை நிறைவேற்றியுள்ளார்.

ஜுங்கா படத்துக்காக சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் ரமணியம்மாள் பாடியிருக்கும் சன் ஆஃப் ரங்கா, கிராண்ட் சன் ஆஃப் லிங்கா, கம்மிங் சூன் ஜுங்கா பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக இந்த ஆடியோ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.