ரூ.500 கோடி பட்ஜெட், 3D மற்றும் 3 மொழி, : கலக்க வருகிறது இராமாயணம்

‘பாகுபலி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து இந்திய திரைப்பட தொழில் புதிய எழுச்சி அடைந்துள்ளது. ஒரு திரைப்படத்தில் ரூ.1000 கோடி சம்பாதிக்கலாம் என்பது முதல்முதலாக இந்தியாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக அளவில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் அல்லு அரவிந்த், மது மேண்டேனா, நமித் மல்ஹோத்ரா ஆகிய மூன்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் இணைந்து ‘இராமாயணம்’ என்ற பிரமாண்டமான திரைப்படத்தை ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளனர்.

3D டெக்னாலஜியில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்த படம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ராமர், சீதை, ராவணன் கேரக்டர்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகைகளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.