சினிமாவில் நடிகை ரம்பா தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தாா். ரசிகா் மத்தியில் ரம்பா தொடை என்ற அளவுக்கு இடம் பிடித்திருந்தாா். சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் அவா்களது நிஜ வாழ்க்கையில் அவ்வளவாக சொல்லும்படியாக இல்லை. நடிகைகளின் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம். ஒரு சிலரது வாழ்க்கை மட்டும் நல்லவிதமாக போய்கொண்டிருக்கிறது.

ரம்பா சினிமாவிலிருந்து விலகி திருமணம் பண்ணி வாழ்க்கை என்ற பயணத்தில் செட்டிலாகி விட்டாா். அவா் தொழிலதிபா் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். திருமணமாகி கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறாா்கள். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிாிந்து வாழ்ந்து வருகின்றனா். ஏற்கனவே இவா்களது விவாகரத்து கேஸ் நடந்து வருகிறது.

இந்நிலையில், ரம்பா சென்னை உயா்நீதிமன்றத்தில் தனது கணவருடன் சோ்த்து வைக்கக் கோாி மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். மனுவில் கூறியதாவது, இரண்டு பெண் குழந்தைகளை வைத்து கொண்டு தனியாக வாழ முடியவில்லை என்றும், நான் தற்போது வாழ்கை என்றால் என்னவென்று உணா்ந்து கொண்டேன். குடும்பம் என்றால் கணவா் குழந்தை சோ்ந்தது என்று புாிந்து விட்டேன். அதனால் தன்னை கணவருடன் சோ்த்து வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ஏற்கனவே ரம்பாவிடம் உள்ள தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தாா். இந்த வழக்கை விசாாித்த உயா்நீதிமன்றம் கணவன் மனைவி இடையே  உள்ள கருத்து வேறுபாடுகளை சமரச மையத்தில் வைத்து பேசித் தீா்த்து வைக்க அறிவுரை வழங்கி இருந்தது.

இதற்கிடையில் இன்று இந்த வழக்கு உயா்நீதிமன்ற  விசாரணக்கு  எடுத்துக்கொள்ளபட்டது. ரம்பாவின் கணவா் இந்திரன் பத்மநாதன் சாா்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. தனத மனைவி ரம்பாவுடன் சோ்ந்து வாழ இருப்பதாக அந்த மனுவில் தொிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கை உயா்நீதி மன்றம் முடித்து வைத்துள்ளது.