பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ஓவியாவிற்கு போட்டியாக பிந்து மாதவியை களம் இறக்கியுள்ளது தயாரிப்பு தரப்பு. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே காயத்ரியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகின. சமூக வலிதளங்களிலும் கழுவி ஊற்றி வருகின்றனர். காயத்ரியை பொறுத்தவரை ஓவியாவிடம் பேசும்போது சிரித்து சிரித்து பேசுவதும், அவர் சென்றபின் அவரை தவறாக பேசுவதையுமே வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல நாயகி ரம்யா நம்பீசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காயத்ரியை கழுவி ஊற்றியுள்ளார். அவரது பக்கத்தில், காயத்ரி ஒரு பச்சோந்தி, நேரில் பார்த்தால் சிரிப்பதும் பின் ஓவியாவை பற்றி புகார் கூறுவதுமாக இருக்கிறார், மோசமான குணம். ஓவியா நீங்கள் தான் சரி என்று பதிவிட்டுள்ளார்.