விஜய் சேதுபதியுடன் மீண்டும் கொஞ்சி பேச வேண்டும்: ரம்யா நம்பீசனின் ஆசை

Vijay Sethupathi, Ramya Nambeesan in Pizza Movie Hot Photos
Vijay Sethupathi, Ramya Nambeesan in Pizza Movie Hot Photos

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பீட்சா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். தமிழில் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில நடித்துவரும் ரம்யா நம்பீசன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கொஞ்சி பேசி நடிக்க ஆசையுடன் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், இதுவரை அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. என்றாலும், அந்த வாய்ப்புகள் எனக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

‘பீட்சா’ படத்திற்கு முன்பே ரம்யா நம்பீசன் பல படங்களில் நடித்தாலும் அந்த படமே அவரை பலருக்கும் தெரிய வைத்தது. அதேபோல், ‘சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.