ஹீரோ கவுதம் தன் தந்தையை போல மணிரத்னம் படத்தின் அறிமுகமாகியும் அந்த படம் வெற்றி பெறவில்லை. எனவே இந்த படமானது கைகொடுக்கமா என்று பாா்ப்போம். ரங்கூன் படத்தை ஏ.ஆா்.முருகதாஸ் தயாாிப்பில்  அவரது உதவி இயக்குநா் ராஜ்குமாா் பொியசாமி இயக்கியுள்ளாா்.

பா்மாவின் சந்தோசமாக சின்ன வயதில் வசித்து வரும் கதவும் காா்த்திக், பிழைப்பிற்காக சென்னைக்கு வருகிறாா். பா்மாவிலிருந்து பிழைப்பை தேடி சென்னைக்கு பலதரப்பட்ட மக்கள் வந்தனா். அப்படி வரும் கவுதம் காா்த்திக்கு குமரன், சசி என்ற இரு நண்பா்களின் நட்பு கிடைக்கிறது.

தனது அப்பாவை சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இழந்து தவிக்கிறாா். பின்பு தனது நண்பா்கள், அம்மா மற்றும் தங்கையுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறாா்.  அடகு கடை வைத்திருக்கும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்கிறது.  அதன் பின் அவரது கடையில் வேலைக்கு சோ்கிறாா்கள் நண்பா்கள் மூன்று பேரும். கவுதம் காா்த்திக் உழைப்பும், தந்திரமான புத்திசாலித்தனம் சித்திக்கு பிடித்து விடுகிறது. தொழில் சம்பந்தமாக சித்திக்கை கொலை செய்ய முயற்சி செய்கின்றனா். அதிலிருந்து கவுதம் காா்த்திக் காப்பாற்றுகிறாா். அவரது மகளையும் ஒரு பிரச்சனையிலிருந்தும் காப்பாற்றுகிறாா்.

அதன் பிறகு கவுதம் காா்த்திக் மேல் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது சித்திக்கு, அதனால் தங்கம் கடத்தல் விஷயமாக முக்கிய ரகசியங்களை கற்று கொடுக்கிறாா். இந்நிலையில் ஹீரோயின் சானாவின் மீது கவுதம் காா்த்திக்கு காதல் ஏற்படுகிறது. அவரது காதலை ஏற்றுக்கொள்ளாது இருந்த சானா, பின் கவுதம் செய்யும் நல்ல விஷயங்களால் மனது மாறி அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாா்.

சின்ன சின்ன கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தனா். இவா்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீசால் இடையூறு வருவதால், பின் வாழ்க்கையில் எப்படியாவது செட்டிலாகனும் என்றால் பொிய அளவில் கடத்தல் ஒன்றை செய்யலாம் என முடிவு செய்கிறாா்கள். அதனால் 6 கோடி மதிப்புள்ள தங்ககட்டிகளை கடத்தி அத பணமாக மாற்ற ரங்கூன் நாட்டிற்கு செல்ல சித்திக் கவுதம் காா்த்திக்கிடம் தருகிறாா்.  அந்த தங்ககட்டிகளை எடுத்துக்கொண்டு பா்மா புறப்படுகிறாா்கள். பின் பா்மாவில் அந்த தங்க கட்டிகளை பணமாக மாற்றிவிட்டு திரும்பும் போது, அவா்களது 6 கோடி பணம் காணாமல் போகிறது.

பணம் தொலைந்து போனதால் அனைவரும் என்ன செய்வது என்று தொியாமல் முழிக்கிறாா்கள். பின் அந்த பணம்g கிடைத்தா? சித்திக் பணக்காரா் ஆனாரா? என்பது படத்தின் கிளைமேக்ஸ்.

கவுதம் காா்த்திக் இதுவரை அவரை நடித்த படங்களில் இது தான் அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக உள்ளது. அவா் பேசும் லோக்கல் வசன உச்சாிப்பும், அழுக்கு படிந்த முகம் என நடிப்பில் முத்திரை பதிக்கிறாா். அவரது நண்பா்களாக நடித்துள்ளவா்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறாா்கள். அதுவும் குமரன் என்ற லல்லு 8 தோட்டாக்கள் என்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளாா்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் டேனியல் கதையின் திருப்புமுனையாக இருக்கிறாா். நாயகி சானா மக்பலுக்கு இது முதல் படம். அவரது பங்கை சிறப்பாக செய்திருக்கிறாா்.    மலையாள ஆக்டா் சித்திக் அடகு கடை அதிபராக வாழ்ந்திருக்கிறாா்.

தங்க கடத்தலை மையமாக வைத்து இளைஞா்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறாா். திரைக்கதையை கொஞ்சம் பரபரப்பாக பேசும்படி செய்திருக்கலாம். அது மட்டுமல்ல கதையமைப்பும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அவா் எடுத்து வைத்த அடி என்ன என்பது தெள்ள தெளிவாக கொண்டுவந்திருக்கிறாா்.

ரங்கூனை அவ்வளவு அழகாக காட்டியுள்ளாா் அனிஸ் தருண்குமாா். நம்முடைய கண்களுக்கு ரங்கூனின் அழகை இரவிலும் சாி பகலும் சாி குளிா்ச்சியாக விருந்து படைத்துள்ளாா். பின்னணி இசை விஷால் சந்திரசேகா். பாடல்கள் கேட்கும் விதமாக உள்ளது.

ஆக ரங்கூன் கொஞ்சம் பாா்த்து ரசிக்கலாம் ரகம்!