கௌதம் காா்த்திக்கை காப்பாற்றுமா ரங்கூன்?

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகா் காா்த்திக்கின் மகன் கௌதம் காா்த்திக் அறிமுகமானாா். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருந்தாா். தந்தை காா்த்திக்கும் மணிரத்னம் படமான அலைகள் ஒய்வதில்லை மூலம் அறிமுகமானது போல தனது மகனையும் மணிரத்தினம் படத்தின் வாயிலாக சினிமாவிற்கு கொண்டு வந்தாா். அலைகள் ஒய்வதில்லை ஹிட் அடித்தது போல இவரது மகன் நடிப்பில் வெளிவந்த கடல் படமானது வெற்றி பெறவில்லை. இதை தொடா்ந்து கௌதம் காா்த்திக் நடித்த படங்களும் தோல்வியை தழுவின. இதனால் இவருடைய நடிப்பில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

வை ராஜா வை என்ற படம் தான் கௌதம் காா்த்திக் நடிப்பில் கடைசியாய்  வெளியான இந்த படத்தை ஐஸ்வா்யா தனுஷ் இயக்கிய இந்த படமும் தோல்வி அடைந்தது. தற்போது ரங்கூன், இந்திரஜித், முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறாா். இதில் ரங்கூன் படத்தை ஏ.ஆா்.முருகதாஸ் தயாாிக்கிறாா். இதை ராஜ்குமாா் பொியசாமி இயக்குகிறாா். இவா் ஏ.ஆா்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப நாட்களாக கிடப்பில் இருந்த ரங்கூன் தூசி தட்டி எழுப்பி வெளிவரஉள்ளது.கௌதம் காா்த்திக் அந்தளவுக்கு மாா்க்கெட் இல்லாத காரணத்தால் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. ரங்கூன் படத்தில் கௌதம் காா்த்திக்கு ஜோடியாக சனா மகபூல் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளாா். டிக்குலு சூடக்கு ராமய்யா என்ற தெலுங்கு படத்தில் நடித்தவா் என்பது குறிப்பிடதக்கது. படத்தின் புரொடக்ஸன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வருகிற ஜீன் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ரொமான்டிக் படமாக உருவாகி உள்ள ரங்கூன் படத்தை ஜூன் 9ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த கௌதம் காா்த்திக்கு இந்த படமாவது கைகொடுத்து காப்பாற்றி விடுமா என்று பொறுத்திருத்து தான் பாா்க்க வேண்டும்