ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று வெளியானது. பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்ததையும் மறுக்க முடியாது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது இதில் அரசியல் கருத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது.

அதே போலவே பல அரசியல் கருத்துக்கள் இதில் உள்ளன. குறிப்பாக மத்திய அரசை இதில் மறைமுகமாக விமர்சித்துள்ளார் ரஞ்சித். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மற்றும் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தாராவி, பியூர் மும்பை போன்ற மாற்று பெயர்கள் இந்த படத்தில் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்.

மேலும், காலா ரஜினியை ராவணனாகவும், வில்லனை ராமரை போலவும் சித்தரித்து மத்திய அரசின் மதவாத அரசியலை கிழித்து தொங்கவிட்டுள்ளார் இயக்குனர் ரஞ்சித் காலா திரைப்படத்தின் மூலம். இது ரஜினிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.