இரண்டு நாட்கள் முன் இயக்குனர் ராமின் பேரன்பு படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின்போது இயக்குனர் மிஷ்கினின் பேச்சு சர்ச்சைக்குரியதாகி உள்ளது.

மம்முட்டி மீது கொண்ட அளவுகடந்த பிரியத்தில் மம்முட்டி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் கற்பழித்திருப்பேன் என மிஷ்கின் கூறியிருந்தார் ஜாலியான பேச்சாக இது இருந்தாலும்

சமூக வலைதளங்களில் கருத்து சொல்லும் சிலர் பெண்களுக்கு எதிராக பல பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வரும் இந்த நேரங்களில் ஒரு பொறுப்பான இயக்குனரே இப்படி பேசலாமா மம்முட்டி உண்மையில் பெண்ணாகவே இருந்தால் கூட இது போல பேசுவது தவறான பேச்சாகாதா என விவாதித்து வருகின்றனர்.