ஜெ. ஆவி போகாமல் தெர்மோகோல் வச்சு காப்பாத்தியிருக்கலாம். ராதாரவி கிண்டல்

தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மதுரை அருகேயுள்ள வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் கொண்டு மூடும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். ஆனால் பத்தே நிமிடங்களில் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த ஐடியாவை கொடுத்த பொதுப்பணித்துறை அதிகாரியும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்

இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகி வருகிறது. இதுகுறித்து நூற்றுக்கணக்கில் மிமி கிரியேட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராதாரவி இசை நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து கிண்டலாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

தெர்மோகோல் ஐடியா முன்கூட்டியே அதிமுககாரர்களுக்கு தெரிந்திருந்தால் ஜெயலலிதாவின் ஆவி பிரிந்துவிடாமல் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் காலம் கடந்து இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியுள்ளது. அந்தம்மா கட்சியில் சில நாட்கள் இருந்ததால் ஒரு விசுவாசத்தால் இதை கூறுகிறேன்’ என்று கூறினார்.