ராட்சஷன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான சில நிமிடங்களிலே பலத்த வரவேற்பை பெற்றது இப்படம். ஏனென்றால் டிரெய்லரே மிரட்டலாக வந்ததுதான் காரணம் மிக மிரட்டலான சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படம் நாளை 5 ம்தேதியன்று வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியான நாளில் இருந்து ஸ்னீக் பீக் என்று சொல்லக்கூடிய படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட நான்கு தொகுப்புகள் வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது.

குழந்தை கடத்தலை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லராக மிரட்டலாக வந்திருக்கும் இப்படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களுக்கு மவுசு என்பதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் ஆர்வ மிகுதியுடன் காணப்படுகிறார்கள் என்பது உண்மை.