போஜ்புரி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி கிஷன். நடிகைகள் போல நடிகர்களும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை கூறியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது தந்தை குறித்து கூறுகையில், எனது தந்தை அரிசி வியாபாரம் செய்து வந்தார். அதனால் என்னையும் அதே தொழிலில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தினார். அதனால் 17 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினேன். ஆனால் எனது தந்தை எனக்கு சொல்லிகொடுத்த பல நல்ல விசயங்கள் என்னை வாழ்க்கையில் உயர்த்தியுள்ளனர். இல்லையெனில் நான் எப்போதோ ஆண் விபச்சாரி ஆகியிருப்பேன் என்று கூறியுள்ளார்.