தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகர் கமிட்டாகியுள்ளார். 

 

விஜய் – அட்லீ கூட்டணி இணைந்தாலே அது மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனா். முதன் முதலாக ’தெறி’ படத்தின் மூலம் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்தது. முதல் படமே வெற்றி படமாக அமைந்த காரணத்தால் இரண்டாவது முறையாக கைகோ்த்து உருவான படம் ’மெர்சல்’. இந்த படமும் ஹிட்டை கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது ‘விஜய் 63’ படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். தெலுங்கில் ‘கண்டிரிகா’ படத்தை இயக்கிய சந்தோஷ் சீனிவாஸ் இப்படத்தை இயக்கவுள்ளார்.மேலும் இப்படத்தை முதலில் ’பவன் கல்யாண்’ ஹீரோவாக நடிக்க அனுகினர். பின்னர் பவன் கல்யாண் கால் ஷுட் கிடைக்காதலால் ’ரவி தேஜா’விடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அவரும் ஒப்புக்கொண்டார்.

தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.