முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 8 பேர் சிறையில் உள்ளனர். இவர்களில் பேரறிவாளன் சமீபத்தில் பரோலில் வெளியே வந்து பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன் என்பவருக்கு 2 வார பரோல் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இவர் தனக்கு ஒருமாதம் பரோல் வேண்டுமென மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரணை செய்து அவருக்கு இரண்டு வாரங்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் பரோல் வழங்கியதை அடுத்து சிறை நடவடிக்கைக்கு பின்னர் அவர் இன்னும் சிறிது நேரத்தில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.